Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மூன்று ஆண்டுகள் தான் அனுமதி,தனியார் பள்ளிகளுக்கு

by Newsdesk

கல்வி
மூன்று ஆண்டுகள் தான் அனுமதி,தனியார் பள்ளிகளுக்கு

தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளி களுக்கு வழங்கப்பட்டிருந்த நிரந்தர அங்கீகாரம்  விலக்கப்பட்டு,இனி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிப்பிக்கும் புதிய நடைமுறையை  தமிழகஅரசின் பள்ளி கல்விதுறை கொண்டுவந்துள்ளது.இது குறித்து பள்ளி கல்வி  முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை வருமாறு;

தமிழ் நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளுக்கு கட்டிடங்களின் உறுதி தன்மை சான்று,நிரந்தரஉள்கட்டமைப்புச்சான்று,தடையில்லாச்சான்று அடிப்படையில் நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது.


கடந்த 2004ஆம் ஆண்டு ஜீலை16ஆம்தேதி கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தை அடுத்து தனியார் வழங்கப்பட்டு வந்த நிரந்தர அங்கீகாரத்தை  ரத்து செய்ய அரசுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் பரிந்துரைத்தது.

மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் பரிந்துரையை ஏற்று, 1994ம்ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்பட்டஅரசாணையின்படி
தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிரந்தர அங்கீகாரம் திரும்ப பெறப்படுகிறது.மேலும் ,இனிஅனைத்து தனியார்
பள்ளிகளுக்கும் 3 ஆண்டு காலத்துக்கு அல்லது கட்டமைப்பு சான்றிதழ் அல்லது கட்டிட உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்துக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும்.இதில் எது முந்தியதோ அதன்படி  அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.


ஏற்கனவே,1994ம் ஆண்டின் அரசணையின்படி நிரந்தர அங்கீகாரம்பெற்ற தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் தொடரும்.
அதே சமயம் அந்த பள்ளிகள்தமிழ்நாடு கட்டிடச்சட்டம் 1965ன் கீழ்ப்பள்ளி கட்டிசத்தை பொதுக்கட்டிடமாக பயன்படுத்த அனுமதியளித்த சான்றிதழ்,பள்ளி கட்டிடத்துக்கான கட்டமைப்பு உறுதிதன்மை சான்றிதழ் உள்ளுர் சுகாதார அலுவலரால் வழங்கப்பட்ட சுகாதாரச் சான்றிதழ்,பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நிலைய அதிகாரிகளிடம் இருந்து பெறப்படும் சான்றிதழ் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும்.சான்றிதழ்களை சமர்பிக்க தவறினால் அந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிரந்தர அங்கீகாரம் திரும்ப பெறப்படும்.

Share via
Advertiment

More Stories

Ads