Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மத்திய கல்வி அமைச்சகம், நீட்வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பா....?

by Admin

கல்வி
மத்திய கல்வி அமைச்சகம், நீட்வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பா....?

மத்திய அரசு, உயர்கல்வித் துறைச் செயலாளர் வினீத் ஜோஷியை பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
புதிய உத்தரவின்படி, வினீத் ஜோஷிக்கு பதிலாக நரேஷ் பால் கங்வார்புதிய உயர்கல்வித் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
:வினீத் ஜோஷி இவர் உயர்கல்வித் துறைச் செயலாளர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, தற்போது பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஜூலை 31 அன்று ஓய்வுபெறும் விவேக் பரத்வாஜுக்குப் பின் இப்பொறுப்பை ஏற்பார்.

நரேஷ் பால் கங்வார்இதற்கு முன்பு கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறைச் செயலாளராக இருந்த இவர், தற்போது புதிய உயர்கல்வித் துறைச் செயலாளராக பொறுப்பேற்கிறார்.டி.கே. அனில் குமார்வினீத் ஜோஷி கூடுதலாக கவனித்து வந்த பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளர் பொறுப்புக்கு, புதிய செயலாளராக டி.கே. அனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

:மத்திய கல்வி அமைச்சகம், நீட்வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பான புகார்களால் நாடு முழுவதும் பெரும் மாணவர் போராட்டங்களையும், எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. தேசிய தேர்வு முகமையின் முன்னாள் தலைவராகவும் இருந்த வினீத் ஜோஷி, இந்த தேர்வு முறைகேடு விவகாரத்தில் அரசுக்கு ஏற்பட்ட அழுத்தங்கள் மற்றும் நிர்வாக ரீதியிலான மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்.

Share via
Advertiment

More Stories

Ads