Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நீட் மறு தேர்வுக்கான கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை கூடுதலாக 15 நிமிடங்கள் நீடித்துள்ளது.

by Admin

கல்வி
நீட் மறு தேர்வுக்கான கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை கூடுதலாக 15 நிமிடங்கள் நீடித்துள்ளது.

நீட் மறு தேர்வுக்கான கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை கூடுதலாக 15 நிமிடங்கள் நீடித்துள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஜூன் 21 அன்று மறு தேர்வு நடத்தப்படுகிறது. புதிய தேர்வு அவகாச நேரம் மூன்று மணியிலிருந்து 3. 15 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 15 வரை நடைபெறும். மாணவர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்து இடுதல் மற்றும் சரிபார்ப்பு போன்ற காரணங்களால் மாணவர்கள் நேரம் வினாத்தாள்களுக்கு விடை அளிக்கக்கூடிய நேர அவகாசம் குறையக்கூடிய காரணத்தினால் அதை தடுக்கும் முயற்சியாக இந்த நேரம் கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. தேர்வின் பொழுது கணக்கீடு செய்வதற்கான பக்கங்களின் எண்ணிக்கை இரண்டு பக்கங்களிலிருந்து நாலு பக்கங்களாகவும் அதிகரித்து உள்ளதோடு வினாத்தாள் புத்தகத்தின் இறுதியில் மட்டுமே இதுவரை செய்து வந்த நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வினாத்தாள் பக்கத்திற்கு அடுத்ததாகவும் வினாத்தாளின் இறுதியில் இரண்டு இரண்டு பக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. இடதுகை பழக்கம் உடையவர்கள் எழுதுவதற்கு சிரமமின்றி வினாத்தாள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads