Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறையா?

by Editor

கல்வி
அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறையா?

 

அனைத்து பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை  விடுமுறை என ஒரு சில மாவட்டஆட்சியர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த நிலையில்  செப்டம்பர் 24 ஆம் தேதி ஒருசில மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள்  அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலை ஒட்டி ஆசிரியர்களுக்கு  சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


இதனை அடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் விடுமுறை என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல் வேலூர் மாவட்டஆட்சியரும் அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு ம்  விடுமுறை என அறிவித்துள்ளார்.

Share via
Advertiment

More Stories

Ads