Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

செப்.13இல் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Editor

கல்வி
செப்.13இல் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த திமுக தேர்தல் வாக்குறுதியில் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்திருந்தது.திமுக ஆட்சியமைத்திலிருந்து பல்வேறு அரசியல் தரப்பினரும் நீட் தேர்வு தொடர்பான திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை மறுநாள் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.நாளை (செப்டம்பர் 12) நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு நாளை மறுநாள் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads