Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

2026 -2027 கல்வி ஆண்டுசி.பி.எஸ்.சி ஆறாம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கையை கட்டாயமாக திட்டமிட்டப்பட்டுள்ளது .

by Admin

கல்வி
 2026 -2027 கல்வி ஆண்டுசி.பி.எஸ்.சி ஆறாம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கையை கட்டாயமாக திட்டமிட்டப்பட்டுள்ளது .

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் பரிந்துரைகளின் படி சி.பி.எஸ்.சி ஆறாம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கையை கட்டாயமாக திட்டமிட்டப்பட்டுள்ளது .இந்த புதிய மாற்றங்கள் 2026 -2027 கல்வி ஆண்டு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அமல்படுத்தப்படும். .மாணவர்கள் தடுக்கும் மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. .புதிய கொள்கையின் படி ஆங்கிலம் ஒரு வெளிநாட்டு மொழியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஒரு மாணவர் ஆங்கிலத்தை தேர்ந்தெடுத்தால் மீதமுள்ள இரண்டு மொழிகளையும் இந்திய மொழிகளாகவே தேர்ந்தெடுக்க வேண்டும் .மொழிகள் ஆர் -1,ஆர்-2  மற்றும் ஆர் -3என மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன .இதில் ஆர்- 3 என்பது ஆறாம் வகுப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்படும் .மூன்றாவது மொழியை குறிக்கும் இதற்காக தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஒன்பது மாநில மொழிகளில் புதிய பாட புத்தகங்களை சி.பி.எஸ்.இ தயாரித்து வருகிறது. இந்த மாற்றங்கள் 2030-31 கல்வி ஆண்டிற்குள் பத்தாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். 2031இல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மூன்று மொழிகளிலும் தேர்வு எழுத கட்டாயமாக்கப்படும்.

Share via
Advertiment

More Stories

Ads