Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கோலாகலமாக நடைபெறவிருக்கும் பொதிகை புத்தகத் திருவிழா - லோகோ மற்றும் அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்.

by Editor

கல்வி
கோலாகலமாக நடைபெறவிருக்கும் பொதிகை புத்தகத் திருவிழா - லோகோ மற்றும் அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்  கமல்கிஷோர்  பொதிகை புத்தகத் திருவிழாவின் லோகோ மற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மேலும் அவர் கூறும்பொழுது,தென்காசி மாவட்டத்தில் மூன்றாவது முறையாக பொதிகை புத்தகத் திருவிழா நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 24ஆம் தேதி வரை தென்காசி இ.சி.ஈஸ்வரன் மாப்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளதாகவும்,புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்க அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்புத்தக கண்காட்சியில் 60-க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அரங்குகள் அமைக்கப்பட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தி வெற்றி பெறும் மாணவர்களுக்கு புத்தகப் பரிசு குப்பைகள் வழங்கப்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் இந்த புத்தக கண்காட்சியில் தினம்தோறும் மாலை பட்டிமன்ற பேச்சாளர்களின் உரைகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment

More Stories

Ads