Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

8 நாட்களில் 1 லட்சத்துக்கும் மேல் விண்ணப்பங்கள்..  இன்ஜினியரிங் படிப்புகளுக்கு மீண்டும் அதிகரிக்கும் மவுசு...

by Admin

கல்வி
8 நாட்களில் 1 லட்சத்துக்கும் மேல் விண்ணப்பங்கள்..  இன்ஜினியரிங் படிப்புகளுக்கு மீண்டும் அதிகரிக்கும் மவுசு...


கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொறியியல் படிப்புக்களுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி  8 நாட்களில்  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

 தமிழ்நாட்டில் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech.
 
, படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கியது.

விண்ணப்ப பதிவு தொடங்கியதில் இருந்தே அதிகளவிலான மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வமுடன் விண்ணப்பித்து வரும் நிலையில், 8-வது நாளான நேற்று ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 611  பேர் விண்ணப்பித்துள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க மேலும் 20 நாட்கள் அவகாசம் உள்ளதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு கூறியுள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads