Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு

by Editor

கல்வி
 வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு

இந்திய வருமான வரிதுறையில் காலியிடங்களை நிரப்பும், புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் - Income Tax
பணியின் பெயர் - Inspector, Tax Assistant & Multi Tasking Staff
பணியிடங்கள் - 152
கடைசி தேதி - 25.08.2021
விண்ணப்பிக்கும் முறை - விண்ணப்பங்கள்

Inspector of Income Tax - 08, Tax Assistant - 63, Multi Tasking Staff - 64 ந்ன மொத்தம் 152 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25-30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும், கல்வி தகுதியாக Inspector of Income Tax-க்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor's Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Tax Assistant-க்கு Bachelor's Degree தேர்ச்சியுடன் Data Entry speed of 8000 key depressions per hour ஆக இருக்க வேண்டும். அதேபோல், Multi Tasking Staff-க்கு Matriculation தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை சம்பளம் வழங்கப்படும். பதிவு செய்வோர் Short Listing, Computer Skill Test, Proficiency Test & Document Verification மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம். மேலும், 25.08.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். https://www.incometaxmumbai.in/wp-content/uploads/sports-quota/Instructions.pdf

 

Share via
Advertiment

More Stories

Ads