Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

 சென்னை பெரம்பூரில் மாணவி எஸ். நந்தினிக்கு பாராட்டு விழா

by Admin

கல்வி
 சென்னை பெரம்பூரில்  மாணவி எஸ். நந்தினிக்கு பாராட்டு விழா

அண்மையில்,தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது .அதில் ,திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி எஸ் .நந்தினி 600 க்கு 600 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதல் இடம் பிடித்தார். இந்த அரிய சாதனையை நிகழ்த்திய மாணவியை தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியதோடு பரிசையும் வழங்கினார் .கவிஞர். வைரமுத்து அவருடைய இல்லத்திற்கு சென்று தங்கப் பேனாவை பரிசளித்தார். தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகள் அவருக்கு பட்ட படிப்பிற்கான முழு செலவையும் ஏற்று கல்விவழங்கவுள்ளதாக அறிவித்த சூழலில், இன்று 04.06.2023 ] மதியம் மூன்று மணியளவில், சென்னை பெரம்பூரில் உள்ள நியூ ஹாலில் மாணவி எஸ் நந்தினிக்கு பாராட்டு விழாவும் விருது வழங்கும் நிகழ்வும் நடக்க உள்ளது ..பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் பரிசும் மற்றும் பாராட்டு சான்றிதழும் இவ்விழாவில் வழங்கப்பட உள்ளது.. இந்நிகழ்ச்சியை, சென்னை பூங்கா நகரில் உள்ள ஸ்ரீ பத்மா மணி ஆச்சாரி அறக்கட்டளை சார்பாக அதன் நிறுவனர் இ .எம். எஸ். மோகன் ஆச்சாரி ,ஜீவிதா மோகன், ,எம் குகன் ஆகியோர் செய்து வருகின்றனர்..

 

Share via
Advertiment

More Stories

Ads