Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு கிறிஸ்துமஸ்திருவிழா நாடெங்கிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

by Editor

ஆன்மீகம்
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு கிறிஸ்துமஸ்திருவிழா நாடெங்கிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் விதமாக தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டு கிறிஸ்துமஸ்திருவிழா நாடெங்கிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் விதமாக  தஞ்சாவூர், திருச்சி, கிருஷ்ணகிரி, நெல்லை, மதுரை, திருப்பூர், புதுக்கோட்டை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.சென்னை பெசன்ட்நகர் புனித தோமையார் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது..புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கோவையில் உள்ள பேராலயங்களிலும் சிறப்பு ஆராதனைகளுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், கொங்கனி, ஆங்கில மொழிகளில் திருப்பலி நடத்தப்பட்டது. கொரோனாவில் இருந்து விடுபட்டு உலகம் இயல்பு நிலைக்கு திரும்பவேண்டி பிரார்த்தனை செய்தனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளதால், தேவாலயங்களில் ஏராளமானோர் திரண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வெளிநாடு, வெளிமாநில மக்களும் பிரார்த்தனையில் பங்கேற்றனர்.

 
 

Share via
Advertiment

More Stories

Ads