Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நெல்லிக்கனி தீபம் எந்த நேரத்தில் ஏற்றுவது பலன் தரும்...?

by Editor

ஆன்மீகம்
நெல்லிக்கனி தீபம் எந்த நேரத்தில் ஏற்றுவது பலன் தரும்...?

நெல்லிக்கனி மகாலட்சுமிக்கும் விஷ்ணு பகவானுக்கும் உகந்தது என்ற விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த நெல்லிக்கனியில் வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபாடு செய்வது நமக்கு வீட்டில் செல்வ கடாட்சத்தை கொடுக்கும்.

வீட்டில் பிரம்ம முகூர்த்தத்தில் இரண்டு நெல்லிக்காய் தீபங்களை ஏற்றுவது வீட்டிற்கு அத்தனை சுபிட்சத்தை தேடித்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய கஷ்டம், கடன் சுமையாக இருந்தாலும் சரி, அதை 48 நாட்களில் ஒரு முடிவுக்கு கொண்டுவர முடியும். பிரம்ம முகூர்த்த நேரம் என்றதுமே பயம் வேண்டாம்.

காலை 6 மணிக்கு முன்பாக இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்றினால் போதும். பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 3.30 மணியிலிருந்து 6.00 மணி வரை உள்ளது. காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் மகாலட்சுமி படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து, இரண்டு நெல்லிக்காய்களை எடுத்து காம்பு பக்கத்தில் சிறியதாக ஓட்டை போட்டு விட்டு, அதன் உள்ளே கொஞ்சமாக நெய் விட்டு, பஞ்சுத் திரி போட்டுத் தீபம் ஏற்றி விட வேண்டும்.

இந்த தீபம் வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டும் தான் எரியும். இருப்பினும் பரவாயில்லை. அந்த ஐந்து நிமிடம் முழுவதும் நீங்கள் பூஜை அறையில் அமர்ந்து மகாலட்சுமியை விஷ்ணு பகவானை வேண்டி மனதார பணக்கஷ்டம் தீர பிரார்த்தனை செய்து கொள்ளலாம். இதனால் வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும்.

Share via
Advertiment

More Stories

Ads