Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இராஜவல்லிபுரம் தேரோட்டம் சிறப்பாக நடைப்பெற்றது

by Editor

ஆன்மீகம்
இராஜவல்லிபுரம் தேரோட்டம்  சிறப்பாக நடைப்பெற்றது

நெல்லை மாவட்டம் தாழையூத்து அடுத்துள்ள இராஜவல்லிபுரம் ஊரில் அமைந்துள்ள செப்பறை திருக்கோவிலில் மார்கழி மாதத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாவான தேரோட்டம் இன்று சிறப்பாக நடைப்பெற்றது.இத்திருக்கோவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது செப்பறை திருக்கோவில் அழகிய கூத்தர் சிவகாமி அம்மன் தாமிரசபைகளில் ஒன்றான தென்தமிழகத்தில் சிறப்பு பெற்றதாகும் சிதம்பர நடராஜர் கோயிலுக்கு அடுத்தபடியாக இந்த திருக்கோவில் இருப்பதாக கருதப்படுகிறது.சிறப்பு தீபாரதனையுடன் தேரோட்டம் விழா தொடங்கப்பட்டது.ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் தேரின் வடத்தை பிடித்து இழுத்து சென்றனர்.தேரின் முன் பகுதியில் சிவனடியார்கள் பஞ்ச வாத்தியம் முழங்க பக்தி பரவசத்தில் சென்றனர்..கோவில் வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Share via
Advertiment

More Stories

Ads