Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குற்றால குற்றால நாதர் ஆலயத்தில் திருவாதிரை திருநாள் தேரோட்டம்

by Editor

ஆன்மீகம்
குற்றால குற்றால நாதர் ஆலயத்தில் திருவாதிரை திருநாள் தேரோட்டம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா நடத்துவது. வழக்கம் இந்த ஆண்டு திருவிழா 11ஆம் தேதி காலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.சிவாச்சாரியார்கள் கொடிபட்டம் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. சிவனடியார்களின் சிவ பூத வாத்தியங்களும் இசைக்கப்பட்டன..

 விழாவில் 15ம் தேதியான இன்று  காலை 9 மணிக்கு மேல் ஐந்து தேர்கள் ஓடும் தேரோட்டம் நடைபெற்றது.. முதலில் விநாயகர், முருகர், நடராஜர், குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்மன் ஆகிய தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இழுக்கப்பட்டது.வரும் 18ம்தேதி காலை 10 மணிக்கு மேல் சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 20ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் சித்திர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு மேல் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது.

மேலும் திருவிழா நாட்களில் தினமும் காலை 9.30 மணிக்கு மேலும், இரவு 7 மணிக்கு மேலும்  நடராஜ பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது..

Share via
Advertiment

More Stories

Ads