Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சிம்பு ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாநாடு

by Admin

சினிமா
சிம்பு ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாநாடு

சிம்பு ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாநாடு

நாளை மறு நாள்(25.11.2021)வெளி வரஉள்ள  மாநாடு  திரைப்படத்தை காண சிம்பு ரசிகர்கள் மிகுந்த ஏதிர்பார்ப்புடன்
 உள்ளனர்.
சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கிறார்இ ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்,இவர்களுடன்  எஸ்.ஏ.சந்திர சேகர்,எஸ்.ஜே.சூர்யா,மனோஜ்,பிரேம்ஜி உள்பட பலர் நடிக்க வெங்கட்பிரபு இயக்கியுள்ளார்.தயாரிப்பு  சுரேஷ் காமாட்சி.
இபடம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம்.இப்படம் வெளிவரும் சூழலில்,தமிழ்நாட்டில் பொது இடங்களுக்குச்செல்வோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டுமென்று தமிழ்நாடு அரசு அண்மையில் சட்டம்
பிறப்பித்தது .இச்சட்டத்தால்,தம் படம் பாதிக்கப்படடு விடுமோ என்கிற அச்சத்தில் உள்ளனர்.இதனை பிரதிபலிக்கும்விதமாக ,படத்தயாரிப்பாளர் தம் ட்விட்டர் பதிவில்,"உலகிலேயே திரையரங்கிற்குச் செல்லத்தடுப்பூசி கேட்பது இங்கு தான் முதல்முறை.அவரவர் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? முன்பு போலவே திரையரங்கிறகு  மக்களை அனுமதிக்க வேண்டும்"என்று பதிவிட்டுள்ளார்.

Share via
Advertiment
Ads