Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புஷ்ப யாகம்

by Admin

ஆன்மீகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புஷ்ப யாகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 14 வகையான மலர்களால் புஷ்ப யாகம்

திருப்பதி கோவிலில் வருடாந்திர புஷ்ப யாகத்தை முன்னிட்டு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை கல்யாணோற்சவ மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள கல்யாணோற்சவ மண்டபத்தில் வருடாந்திர புஷ்ப யாகம் நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 5 மணிவரை நடந்தது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை கல்யாணோற்சவ மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர்.

வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க 14 வகையான மலர்களால் உற்சவர்களுக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.
 
அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Share via
Advertiment

More Stories

Ads