Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆய்க்குடியில் நடைபெற்ற கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

by Editor

ஆன்மீகம்
ஆய்க்குடியில் நடைபெற்ற கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தமிழகத்திலுள்ள முருகன் ஆலயங்களில் திருசெந்தூருக்கு அடுத்தபடியாக தென்மாவட்டத்தில் தென்காசி மாவட்டம் ஆய்க்குடி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம்.இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு  கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா கடந்த (4.11.2021)  தீபாவளியன்றுகொடியேற்றத்துடன்  தொடங்கப்பட்டது.

நாள்தோறும் சுவாமி பகல் மற்றும் இரவு வேளைகளில் ரிஷபம், மயில், யானை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதிஉலா, தீபாராதனை நடைபெற்றது.ஆறாம் திருநாளான இன்று சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா ஆய்க்குடி சிவன் கோவில் மைதானத்தில் நடைபெற்றது. மகாசூரன், சிங்கமகா சூரன்,  ஆனைமுகசூரன் ஆகிய 3 அசுரர்களை சுவாமி முருகன் வெள்ளி ரதத்தில் வந்து வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த விழாவில் தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி,செங்கோட்டை,கடையநல்லூர்,சுரண்டை,உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்   இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி  தரிசனம் செய்தனர்

Share via
Advertiment

More Stories

Ads