Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தமிழ் மக்களுக்கு. விருதை சமர்ப்பிக்கிறேன்:ரஜினிகாந்த்

by Editor

சினிமா
தமிழ் மக்களுக்கு. விருதை சமர்ப்பிக்கிறேன்:ரஜினிகாந்த்

 

மத்திய அரசாங்கம் வழங்கியுள்ள திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


67ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில்  நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு "தாதா சாகேப் பால்கே" வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் பேசிய ரஜினிகாந்த் என் அண்ணன் சத்தியநாராயணா, எனக்கு ஒரு தந்தையாக இருந்து நல்லதை போதித்தார். எனது நண்பர் பெங்களூரு பேருந்து ஓட்டுநர் ராவ் பகதூர் எனக்குள் இருக்கும் நடிப்பு திறமையை உணர்ந்து என்னை நடிக்க கூறினார்.


இந்த விருது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது அறிக்கையில்; " மத்திய அரசாங்கம் எனக்கு வழங்கியுள்ள திரை உலகின் மிக உயர்ந்த விருதான "தாதா சாகேப் பால்கே" விருதினை எனக்கு உருவாக்கிய என்னுடைய குருநாதர் கே. பாலசந்தர் அவர்களுக்கும் என்னுடைய அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும், என்னுடைய நண்பர் ராஜ்பகதூர் அவர்களுக்கும், என்னுடைய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சக நடிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் என்னுடைய ரசிகர்கள் மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Share via
Advertiment
Ads