Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா

by Editor

ஆன்மீகம்
 ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில்  நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா தொடங்கியது.
நவம்பர் 1 வரை 9 நாள்கள் நடைபெறும் விழாவில் நாள்தோறும் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அதன்படி விழாவின் முதல் திருநாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்துக்கு எதிரிலுள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளி, ஊஞ்சல் மண்டபத்துக்கு 5.30-க்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து இரவு 7.15-க்கு உபயநாச்சியார்களுடன் ஊஞ்சலில் நம்பெருமாள் எழுந்தருளி, மங்கள ஆரத்தி கண்டருளி 8.15 வரை ஊஞ்சலில் ஆடியவாறு இருபுறமும் வெண்சாமரம் வீச மங்களவாத்தியத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

பின்னர் 9 மணிக்கு அவர் புறப்பட்டு 9.15-க்கு மூலஸ்தானம் சென்று சேர்ந்தார். 7 ஆம் திருநாளான வரும் 30 ஆம் தேதி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சியும் 9 ஆம் திருநாளான நவ. 1 ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.  தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.

Share via
Advertiment

More Stories

Ads