Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் வெற்றி

by Editor

விளையாட்டு
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் வெற்றி

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 லீக் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தனர்.

இங்கிலாந்து அணியுடனான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. துபாயில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. படுமோசமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுக்க, அந்த அணி 14.2 ஓவரில் வெறும் 55 ரன்னுக்கு சுருண்டது.

இங்கிலாந்து பந்துவீச்சில் ரஷித் 2.2 ஓவரில் 2 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மொயீன், மில்ஸ் தலா 2, வோக்ஸ், ஜார்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 8.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன் எடுத்து வென்றது. ராய் 11, பேர்ஸ்டோ 9, மொயீன் 3, லிவிங்ஸ்டோன் 1 ரன்னில் வெளியேறினர். பட்லர் 24 ரன், கேப்டன் மார்கன் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்துக்கு 2 புள்ளிகள் கிடைத்தன. மொயீன் அலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.x

முன்னதாக நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா மோதின. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்தது. இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 119 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேற அந்த அணியும் திணறியது. இறுதியாக 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்து ஆஸ்திரேலியா வென்றது

Share via
Advertiment
Ads