Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா திணறல்

by Editor

விளையாட்டு
டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா திணறல்

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் விளையாடி வருகின்றன. அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே சேர்த்தது.


அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான தேம்பா பாவுமா, குயின்டன் டி காக், ராசி வான் டெர் டஸன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். டேவிட் மில்லர் 16 ரன்களுடன், ஆடம் ஜாம்பா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். நிதானமாக ஆடிய ஐடன் மார்க்ராம், 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது ஆஸ்திரேலியா.

Share via
Advertiment
Ads