Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தீராத கஷ்டங்கள் தீர வேண்டுமா ?

by Editor

ஆன்மீகம்
 தீராத கஷ்டங்கள் தீர வேண்டுமா ?

 

பித்தளை அல்லது செம்பினால் ஆன பாத்திரம், தட்டு போன்ற ஏதேனும் ஒரு பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீர் ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து கொள்ளுங்கள். அந்த நீரின் மேல் வேப்ப இலைகளை நன்கு தண்ணீரில் அலசிவிட்டு சுற்றிலும் மிதக்க விடுங்கள். நடுவில் செவ்வரளி மலர்களை வையுங்கள்.
செவ்வரளி மலர்கள் தோஷங்களை போக்க வல்லது. பைரவர், விநாயகர் போன்ற தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்தப்படுகிறது. ஜாதகத்தில் இருக்கும் தோஷம் நீங்க செவ்வரளி மலர் சிறந்த பரிகாரமாக இருக்கும். அதனால் இந்தப் பூவை வேப்பிலையை சுற்றிலும் வைத்து விட்டு நடுவில் இதை வையுங்கள். இப்போது உங்களுக்கு உருளி போன்ற அம்சம் கிடைக்கும். இதை வீட்டு வாசலில் மற்றவர்களின் கண்களுக்குத் தெரியும் படி ஒரு ஓரமாக வைத்து விடுங்கள்.ஒரு வாரம் வரை இதை அப்படியே வைத்து மறுவாரம் புதிதாக மாற்றிக் கொள்ளுங்கள். இப்படி வாரா வாரம் செய்து வர உங்களுடைய குடும்ப கஷ்டங்கள், பிரச்சினைகள் விரைவாக தீரும் என்று ஆன்மீக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads