Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

‘ஜெய் பீம்’ படத்தின் முதல் பாடல்

by Editor

சினிமா
‘ஜெய் பீம்’ படத்தின் முதல் பாடல்

 

சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் முதல் பாடலான, ‘பவர்’ வெளியாகியுள்ளது.
தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.


பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் இந்தப் படத்தில் நடித்துள்ளது.


இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் படமான ஜெய் பீம், நீதிமன்ற வழக்காடலை களமாகக்கொண்டது. இந்தப் படத்தை திரையுலகம் மட்டுமல்லர்; அரசியல் வட்டாரத்தினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


‘பவர்’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் முதல் பாடலை படக்குழு நேற்று மாலை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற கலைஞர்களில் ஒருவரான அறிவு எழுதிப் பாடியிருக்கும் இந்தப் பாடலுக்கு ஷான் ரால்டன் இசையமைத்திருக்கிறார்.உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2021, நவம்பர் 2ஆம் தேதியன்று ‘ஜெய் பீம்’ திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அமேசானின் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியாகிறது.

Share via
Advertiment
Ads