Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

முக ஸ்டாலின் க்கு எஸ்.ஏ.சந்திரசேகர் பாராட்டு

by Editor

சினிமா
முக ஸ்டாலின் க்கு எஸ்.ஏ.சந்திரசேகர் பாராட்டு

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னால் தமிழக முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின் ஆட்சி மற்றும் அவரது அதிரடி நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன என்பதும் பெரும்பாலும் அவருக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகர்  முதலமைச்சர் முக ஸ்டாலின்க்கு பாராட்டு தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதி இருந்திருந்தால் ஸ்டாலின் செயல்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு இருப்பார் என்றும் அம்மா உணவகத்தில் பெயரை மாற்ற வேண்டாம் என சொன்னார் இந்த மாதிரி பெருமை எல்லாம் நான் இதுவரை அரசியலில் பார்த்ததில்லை என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியையும், அதேபோல் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியையும் அவர் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முக ஸ்டாலின்  ஆட்சியையும் அவர் பாராட்டியுள்ளார்.

Share via
Advertiment
Ads