Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அண்ணனை கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டிய நடிகை

by Editor

சினிமா
அண்ணனை கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டிய நடிகை

 

 

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்வாப்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலையில்லாமல் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் உடல் கிடந்தது. இதுபற்றி கேஷ்வாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபரை யாரோ மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி காரில் கொண்டு வந்து சாலையோரம் வீசிவிட்டு சென்றிப்பது தெரியவந்தது.


பின்னர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட நபர் 'மிஸ் கர்நாடகா' அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், நடிகையுமான ஷான்யா காடவேயின் அண்ணன் ராகேஷ் என்பது தெரியவந்தது

மும்பையில் வசித்து வரும் நடிகை ஷான்யா தனது மேலாளர் நியாஜ் அகமது என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இது ஷான்யாவின் அண்ணன் ராகேஷுக்கு பிடிக்கவில்லை.


இதனால் அண்ணனை தீர்த்துக் கட்ட முடிவு செய்த ஷான்யா, இதுகுறித்து தனது காதலன் நியாஜ் அகமதுவிடம் தெரிவித்தார். அவரும், இந்த கொலை திட்டத்திற்கு ஒப்புக் கொண்டார். அதையடுத்து அவர்கள் கூலிப்படையை ஏவி ராகேஷை கொலை செய்தனர். தற்போது நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை தெரிய வர, தற்போது ஷான்யா, அவரது காதலன் நியாஜ் அகமது, கூலிபடையினர் என கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share via
Advertiment
Ads