Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கோல்கட்டா-கேரளா மோதல்  ஐ.எஸ்.எல்., அட்டவணை அறிவிப்பு

by Editor

விளையாட்டு
கோல்கட்டா-கேரளா மோதல்  ஐ.எஸ்.எல்., அட்டவணை அறிவிப்பு


 ஐ.எஸ்.எல்., தொடரின் 8 வது சீசனுக்கான முதல் கட்ட அட்டவணை வெளியானது. முதல் போட்டியில் கோல்கட்டா, கேரள அணிகள் மோதவுள்ளன.


இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர் இந்தியாவில் நடக்கிறது. சென்னை, கோல்கட்டா, மும்பை உட்பட 11 அணிகள் பங்கேற்கின்றன. இதன் 8வது சீசன் வரும் நவ. 19 முதல் துவங்குகிறது. மொத்தம் 115 போட்டிகள் நடக்கவுள்ளன.
போட்டிகள் கடந்த சீசன் போல பம்போலிம், மர்கோவா, படோர்டா என மூன்று மைதானங்களில் மட்டும் நடக்கும்.


இதற்கான முதல் கட்ட அட்டவணை வெளியானது. 2022, ஜன. 9 வரையிலான முதல் 11 சுற்றில் நடக்கவுள்ள 55 போட்டிகளுக்கான விபரங்கள் வெளியாகின.முதல் போட்டியில் மூன்று முறை சாம்பியன் ஆன கோல்கட்டா மோகன் பகான் அணி, கேரளாவை சந்திக்கிறது. நடப்பு சாம்பியன் மும்பை அணி, தனது முதல் போட்டியில் (நவ. 21) ஜாம்ஷெட்பூரை சந்திக்க உள்ளது.ஐ.எஸ்.எல்., தொடரில் இருமுறை கோப்பை வென்றது சென்னை அணி (2015, 2017-2018). 2019-2020 சீசனில் பைனலுக்கு முன்னேறியது. இம்முறை நவ. 23ல் தனது முதல் போட்டியில் களமிறங்கும் சென்னை அணி, ஐதராபாத்தை சந்திக்கிறது.

Share via
Advertiment
Ads