Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமின் மனு தள்ளுபடி

by Editor

சினிமா
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமின் மனு தள்ளுபடி


பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், 23, தன் நண்பர்கள் ஏழு பேருடன் அந்த கப்பலில் பயணித்தார். அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த பல்வேறு போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து ஆர்யன் மற்றும் அவரது நண்பர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.போலீஸ் காவல் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் ஆர்யன் கான் உள்ளிட்ட எட்டு பேர் மும்பை நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்தப்பட்டனர்.
அவர்களை 14 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


இந்நிலையில், ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது  விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் மீண்டும் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வழக்கறிஞர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

Share via
Advertiment
Ads