Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திருப்பதியில் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் 

by Editor

ஆன்மீகம்
திருப்பதியில் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் 


திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்  தொடங்கியது.
கரோனா காரணமாக அக்டோபர் 15-ஆம் தேதி வரை கோயிலின் உள்ளே பிரம்மோற்சவ விழா நடக்கிறது.


தினமும் காலை, மாலை கல்யாண உற்சவ மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு சேவை புரிவார்.
வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது, கொடி மரத்தில் கருடக் கொடி ஏற்றப்படும். அப்போது, கொடி மரத்துக்கு வஸ்திரம் அணிவித்து மாவிலை, மலா் மாலைகள் கட்டி பெரிய தா்பை புற்களால் ஆன 2 பாய்களை பின்னி அதை தா்பையால் செய்த கயிறு மூலம் கொடிமரத்தில் பிணைப்பா்.


இந்தத் தா்பை புற்கள் ஓராண்டு காலம் அப்படியே கொடிமரத்தில் இருக்கும். மீண்டும் அடுத்த பிரம்மோற்சவத்தின்போது அதை அகற்றி புதியதாக பாய் பின்னி அணிவிக்கப்படும்.

Share via
Advertiment

More Stories

Ads