Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

 ‘பெருந் தலைவர் காமராஜ் - 2’ சினிமாபட பிடிப்பு துவக்கம் 

by Editor

சினிமா
 ‘பெருந் தலைவர் காமராஜ் - 2’ சினிமாபட பிடிப்பு துவக்கம் 

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்று படமான ‘‘பெருந் தலைவர் காமராஜ் - 2’’ படத்தின் பட பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.


ரமணா கம்யூனிகேஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பில் தயாரிக்கிறார், இயக்குனர் ஏ.ஜே. பாலகிருஷ்ணன்.
முதல் பாகம் 2004ல் வந்தது. அந்த திரைப்படத்திற்கு தமிழக அரசின் சிறப்புப் பரிசு கிடைத்தது. காமராஜர் வாழ்ந்த நினைவு இல்லத்தில் ஜி.கே.வாசன் படத்தைத் துவங்கி வைத்தார்.

டாக்டர்.வேணுகோபால் (முன்னாள் எம்.பி.) கலந்து கொண்டார்.
காமராஜரின் முக்கியமான திட்டமான பள்ளி மாணவ, மாணவியர் களுக்கு பகல் உணவு திட்டத்தை தொடங்கி வைப்பது போல் காட்சி முதல் நாளில் படமாக்கப்பட்டது.காமராஜர் வேடத்தில் பிரதீப் மதுரம் நடிக்கிறார். மற்றும் தீனா தயாளன், ஆர். வெங்கட்ராமன் நடிக்கிறார்கள். மற்ற கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.


எட்வின் சகாய் ஒளிப்பதிவு. கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் செந்தூர் நாகராஜன், கவிஞர் புருஷோத்தமன் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.

Share via
Advertiment
Ads