Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சென்னை அணியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்த டெல்லிஅணி 

by Editor

விளையாட்டு
சென்னை அணியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்த டெல்லிஅணி 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 50-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பாண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும்  மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பாண்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.


தொடக்கத்தில் இருந்தே சென்னை அணியின் வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 136 ரன்கள் எடுத்தது.137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி வீரர்கள் ஸ்ரேயாஸ் 2 , ரிஷாப் பண்ட் 15, ரிபல் 18 , ரவிசந்திரன் அஸ்வின் 2 மற்றும் ஷிம்ரன் 28 ரன்களில் வெளியேறினர். 19.4 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு டெல்லி அணி 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி அணி 20 புள்ளிக்களுடன் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.


போட்டிக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி கூறியதாவது;-
நாங்கள் 150 ரன்கள்வரை எட்டுவோம் என எதிர்பார்த்தோம் ஆனால் கிடைக்கவில்லை. ஆடுகளம் இரட்டை தன்மையுடன் இருந்தது. இதனால், நம்முடைய இயல்பான ஷாட்களை ஆடமுடியவில்லை. டெல்லி பேட்ஸ்மேன்களும் இதே சிரமங்களை எதிர்கொண்டனர். உயரமான பந்து வீச்சாளர்களுக்கு பந்து நன்றாக திரும்பி சென்றது” என்றார்.

Share via
Advertiment
Ads