Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

  சிம்பு அரசியல் கட்சி தொடங்க திட்டமா? 

by Editor

சினிமா
  சிம்பு அரசியல் கட்சி தொடங்க திட்டமா? 

 

நடிகர் சிம்பு திடீரென அரசியல் கட்சி பாணியில் தனது ரசிகர் மன்றத்தை மாற்ற முடிவு செய்திருப்பதாக அவரது அறிக்கை தெரிய வந்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களிடம் இருந்தும், சினிமா உலகில் இருந்தும் விலகி இருந்தார் என்பதும், ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அவர் மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டார் என்பதும் ஒரே நேரத்தில் 3 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மதிப்பும் அன்பும் கொண்ட என் ரத்தத்தின் ரத்தமான என் உறவுகளே, வணக்கம்! நீண்ட நாளாக இயற்கையின் செயல்களால் உங்களிடம் நேரடியாக உறவாடாமல், உங்களின் தொலைபேசி வாயிலாக உறவு கொண்டோம்.
மேலும் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில் நுட்ப அணி, கலை இலக்கிய அணியின் மூலம் மன்றத்தின் பணிகளை விரைவுபடுத்த உள்ளோம். 


ஆதலால் நம் நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவர் வாசு அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. ஆகையால் மாநில, மாவட்ட, பொறுப்பாளர்கள் நமது தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share via
Advertiment
Ads