Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஜோதிகா – சசிக்குமார் இணையும் உடன் பிறப்பே : ரிலீஸ் தேதி அறிவிப்பு

by Editor

சினிமா
ஜோதிகா – சசிக்குமார் இணையும் உடன் பிறப்பே : ரிலீஸ் தேதி அறிவிப்பு

 நடிகர் சூர்யா நடிப்பதோடு மட்டுமில்லாமல் சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தனது 2டி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தும் வருகிறார். பசங்க 2, காற்றின் மொழி, 36 வயதினிலே,பொன்மகள் வந்தாள் என அவர் தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 


தற்போது அவரின் தயாரிப்பில் 4 திரைப்படங்கள் உருவாகியுள்ளது. இதில் சூர்யாவே நடித்துள்ள திரைப்படம் ஜெய் பீம். அடுத்து சசிக்குமார் – ஜோதிகா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘உடன் பிறப்பே’. அதேபோல், ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும். இப்படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியானது. அதேபோல், ஓ மை டாக் என ஒரே நேரத்தில் 4 படங்களை தயாரித்துள்ளார். 


இந்நிலையில், உடன் பிறப்பே திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 14ம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜெய் பீம் மற்றும் ஓ மை டாக் ஆகிய படங்கள் அடுத்தடுத்து அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.இப்படம் அண்ணன் தங்கை பாசம் கொண்ட செண்டிமெண்ட் திரைப்படமாகும்.

Share via
Advertiment
Ads