Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திருப்பதி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்

by Editor

சினிமா
திருப்பதி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன்,  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.


இந்த நிலையில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர்.


கோவிலுக்கு வெளியே ஜோடியாக இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அங்கிருந்த ரசிகர்களும் நயன்தாராவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

Share via
Advertiment
Ads