Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

 கொம்பு வெச்ச சிங்கம்டா படத்தின் டிரைலர் 

by Editor

சினிமா
 கொம்பு வெச்ச சிங்கம்டா படத்தின் டிரைலர் 

 

இயக்குனர் மற்றும் நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மற்றும் நடிகர் சமூத்திரகனி, நடிகர் அருண் விஜய் ஆகியோர் கொம்பு வெச்ச சிங்கம்டா படத்தின் டிரைலரை  டிவிட்டர் வலைதளத்தில் வெளியிட்டனர்.


பெரும் வெற்றி பெற்ற சுந்தரபாண்டியன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் இயக்குனர் பிரபாகரன் - சசிகுமார் கூட்டணியில் உருவான கொம்பு வெச்ச சிங்கம்டா படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசை அமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார், சண்டைக் காட்சிகளை அன்பறிவ் இரட்டையர்கள் இயக்கியுள்ளனர். டான் போஸ்கோ படத்தொகுப்பை கவனிக்கிறார்.


இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக, பிரேமம் புகழ் மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார்.இவர்களுடன் சூரி, யோகிபாபு, மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் இந்த வருடம் திரைக்கு வர இருக்கிறது.

Share via
Advertiment
Ads