Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2.. விரைவில் துவங்கும் படப்பிடிப்பு

by Editor

சினிமா
ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2.. விரைவில் துவங்கும் படப்பிடிப்பு

 

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்து 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று வசூலை வாரிக்குவித்தது. இப்படம் மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா ஆகியோர் நடித்த ‘மணிச்சித்திரத்தாள்’ படத்தின் ரீமேக் ஆகும்.ஆனால், தமிழில் கதை மற்றும் திரைக்கதையில் பல மாற்றங்களை பி.வாசு செய்திருப்பார். எனவேதான், இப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.


இப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்படத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகவுள்ளது. இதில், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். மேலும், அனுஷ்கா, வடிவேலு ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனவே, அவர்களும் இப்படத்தில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 15ம் தேதி துவங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Share via
Advertiment
Ads