Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகை மியா ஜார்ஜ் தந்தை காலமானார்

by Editor

சினிமா
நடிகை மியா ஜார்ஜ் தந்தை காலமானார்

ஆர்யாவின் தம்பி சத்யா நடிகராக அறிமுகமான அமரகாவியம் படத்தில் 2014 ஆம் ஆண்டு அறிமுகமானவர் மியா ஜார்ஜ். தொடர்ந்து தமிழில் அமரகாவியம், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து,எமன் உள்ளிட்டப் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மலையாள படங்களை பொறுத்தவரை மெமரிஸ், ரெட் வைன், டிரைவிங் லைசென்ஸ் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கும் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் பிலிப்பையாவுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நடிகை மியா ஜார்ஜின் தந்தை ஜார்ஜ் ஜோசப் (75) இன்று கோட்டயம் அருகே பாலாவில் உள்ள வீட்டில் திடீரென மரணமடைந்தார்.

Share via
Advertiment
Ads