Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திரைப்படங்கள் எப்போதும் தியேட்டர்களில் வெளியாக வேண்டும் - சிவகார்த்திகேயன்

by Editor

சினிமா
திரைப்படங்கள் எப்போதும் தியேட்டர்களில் வெளியாக வேண்டும் - சிவகார்த்திகேயன்

கோவையில் நிகழ்சி ஒன்றில் பங்கேற்று பின் செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் கூறிதாவது, "நான் நடித்த டாக்டர் திரைப்படம் அடுத்த மாதம் 9-ந் தேதி வெளியாகிறது. திரைப்படங்கள் எப்போதும் தியேட்டர்களில் வெளியாக வேண்டும் என்பது தான் எனது ஆசை. திரையங்குகளில் நான் படம் பார்த்து வளர்ந்தவன் என்பதே அதற்கு காரணம்.

தற்போதுள்ள காலச்சூழலில் எனது தனிப்பட்ட சிந்தனையை மட்டும் இதில் திணிக்க முடியாது.ஓடிடி தளங்களை பொறுத்தவரை அவற்றில் உள்ள நல்ல வி‌ஷயங்களை மட்டுமே நான் பார்க்கிறேன். நடிகர்கள் சேர்ந்து இவ்விவகாரத்தில் யாருக்கு எதிராகவும், சாதகமாகவும் முடிவு எடுக்க முடியாது. படங்கள் ஏதோ ஒரு வகையில் வெளியாக வேண்டும். அப்போது தான் திரைத்துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்" என்றார்.

Share via
Advertiment
Ads