Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அருள்நிதி.நடிக்கும், புதீய படம் 

by Editor

சினிமா
அருள்நிதி.நடிக்கும், புதீய படம் 

 

கெளதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ராட்சசி'. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், வசூல் ரீதியாகப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

'ராட்சசி' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான கதையை எழுதிவந்தார் கெளதம்ராஜ். இதற்காகப் பல்வேறு நடிகர்களிடம் பேசிவந்தார். இறுதியாக இந்தப் படத்தின் நாயகனாக அருள்நிதி நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

தற்போது அருள்நிதியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. விரைவில் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Share via
Advertiment
Ads