Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பிரபல குத்துச்சண்டை வீரர்   பிலிப்பைன்ஸ்அதிபர் தேர்தலில் போட்டி

by Editor

விளையாட்டு
பிரபல குத்துச்சண்டை வீரர்   பிலிப்பைன்ஸ்அதிபர் தேர்தலில் போட்டி


உலக அளவில் மிகவும் பிரபலமான குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான மேனி பக்கியோவ் பில்ப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர். 42 வயதான பக்கியோவ் குத்துச்சண்டையில் உலக அளவில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.
இதற்கிடையில், மேனி பக்கியோவ் 2010- ம் ஆண்டு முதல் பிலிப்பைன்ஸ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.


இந்நிலையில், பிலிப்பைன்சில் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மேனி பக்கியோவ் போட்டியிடுகிறார். பிடிபி-லேபன் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக மேனி பக்கியோவ் போட்டியிட உள்ளார்.   
 

Share via
Advertiment
Ads