Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தெலுங்கில் நஸ்ரியா

by Admin

சினி ஆல்பம்
தெலுங்கில்  நஸ்ரியா

நடிகர் பஹத் பாசிலின் மனைவியும், நடிகையுமான நஸ்ரியா, தெலுங்கில் ‘அன்டி சுந்தரினிகி’ படம் மூலம் அறிமுகமாக உள்ளார்.

தமிழில் நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நஸ்ரியா. திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, கடந்த 2014-ம் ஆண்டு, நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து சில ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நஸ்ரியா கடந்தாண்டு மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். 

இந்நிலையில், நடிகை நஸ்ரியா தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது அவரது முதல் தெலுங்கு படமாகும். இப்படத்தில் நானி ஹீரோவாக நடிக்கிறார். விவேக் ஆத்ரேயா இயக்கும்  இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அன்டி சுந்தரினிகி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். ரொமான்டிக் காமெடி படமாக இது தயாராகிறது. “முதலாவது எப்போதுமே ஸ்பெஷல். அதனால் இந்தப் படமும் எனக்கு ஸ்பெஷல் தான்” என நடிகை நஸ்ரியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Share via
Advertiment
Ads