Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : இறுதிப் போட்டியில் ஜோகோவிச் – மெத்வதேவ் மோதல்

by Editor

விளையாட்டு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் : இறுதிப் போட்டியில் ஜோகோவிச் – மெத்வதேவ் மோதல்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி போட்டியில் ஜோகோவிச் மெத்வதேவ் ஆகியோர் மோதுகின்றனர்.

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் ஜோகோவிச் (செர்பியா) - ஸ்வரேவ் (ஜெர்மனி) மோதினர். மிகவும் பரபரப்பாக இந்தப் போட்டி நடைபெற்றது. தரவரிசையில் முதலிடத்தில் வகிக்கும் ஜோகோவிச்சுக்கு 4-ஆம் நிலை வீரரான ஸ்வரேவ் கடும் சவால் அளித்தார்.எனினும், சுதாரித்து விளையாடிய ஜோகோவிச் 4- 6, 6 -2, 6- 4,4- 6, 6 -2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் முன்னேறினார். இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச், 4-வது முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.

மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ், தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள கனடா வீரர் பெலிக்ஸ் அஜெர் அலியாசிசை எதிர்கொண்டார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் 6- 4, 7- 5, 6 -2 என்ற கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெட்வதேவை ஜோகோவிச் எதிர்கொள்கிறார்.

Share via
Advertiment
Ads