Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வாழ்க்கையில் அடுத்த நபர் யார்?" : நடிகை வனிதா

by Editor

சினிமா
வாழ்க்கையில் அடுத்த நபர் யார்?

வனிதா விஜயகுமாரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும். அதிலும் அண்மையில் அவர் திருமணம் செய்து கொண்டு அதில் முறிவு ஏற்பட்ட பிறகு நெட்டிசன்கள் பேசுவது அதிகமானது.

வனிதா பிக்கப் படத்திற்காக பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும், கழுத்துமாக இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

அது படத்திற்காக எடுத்தது என்று குறிப்பிடாமல் வெளியிட்டதால், வனிதாவின் நான்காவது கணவர் பவர்ஸ்டார் என்று ஆளாளுக்கு பேசினார்கள். அதன் பிறகே செய்தியாளர்கள் சந்திப்பில் வனிதா விளக்கம் அளித்தார்.இந்நிலையில் தான் நடிக்கும் கென்னி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்புக்கு வந்த வனிதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஜோதிடப்படி உங்கள் வாழ்வில் அடுத்து வருபவரின் பெயர் S என்கிற எழுத்தில் துவங்கும் என்று பிக்கப் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தீர்கள். அந்த நபர் யார் என்று இதுவரை சொல்லவில்லையே என்று கேட்கப்பட்டது.அதற்கு வனிதாவோ, எனக்கே தெரியவில்லை, அப்புறம் நான் எங்கே உங்களுக்கு சொல்றது என்றார். வனிதா வாழ்க்கையில் அடுத்து ஒருவர் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறீர்களா என ஒருவர் கேட்டார்.அதை கேட்ட வனிதா சிரித்துக் கொண்டே, என்னங்க உங்க பிரச்னை, சொல்ல முடியாதுங்க. அதெல்லாம் ஒரு சஸ்பென்ஸ் ஸ்டோரி என்று பதில் அளித்தார்.

Share via
Advertiment
Ads