இலங்கை ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணியின் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி வெறும் 11 பந்துகளில் அரைசதம் மற்றும் 29 பந்துகளில் 94 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்துள்ளார்.
ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில், தம்புள்ளை மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், சூர்யவன்ஷி 29 பந்துகளில் 94 ரன்கள். குவிப்பு.அவரது இன்னிங்ஸில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 அசாத்திய சிக்ஸர்கள் அடங்கும்.: வெறும் 11 பந்துகளிலேயே அரைசதம் கடந்து, லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்தார் .
அரைசதம் அடிக்கும் வரை சிங்கிள்ஸ் ஏதும் ஓடி எடுக்காமல், அனைத்து ரன்களையும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் மூலமாக மட்டுமே பெற்றார்.இதற்கு முந்தைய லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த இறுதிப் போட்டியில் இலங்கை பந்துவீச்சை அனைத்து திசைகளிலும் சிதறடித்து தனது வெறியாட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஏ கிரிக்கெட்டில் உலகிலேயே அதிவேக சதம் (ஜேக் ஃபிரேசர்-மெக்கர்க் - 29 பந்துகள்) என்ற சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9-வது ஓவரில் துரதிர்ஷ்டவசமாக 94 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சதம் அடிக்காவிட்டாலும், அவர் ஆடிய விதம் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் இருப்பதை உணர்த்துகிறது.

