திரைப்படத்துறையில் நீண்ட காலம் பயணித்தவரும் தயாரிப்பாளர்களில் ஒருவரும் நடிகருமான கே ராஜன் மனநிலை அழுத்தத்தின் காரணமாக இன்று அடையார் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.. பழைய வண்ணாரப்பேட்டையில் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய பின்னர் திரைப்படங்களை தயாரிக்க தொடங்கினார். 1983ல் பிரம்மச்சாரிகள் என்னும் திரைப்படத்தை தயாரித்து தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானவ.ர் அவள் பாவம், நினைக்காத நாளில்லை உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். நம்ம ஊரு மாரியம்மா, உணர்ச்சிகள் ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார். பாம்பு சட்டை, துணிவு ,பகாசுரன் உள்ளிட்ட படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் சென்னை விநியோசர்கள் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். சினிமா மேடைகளிலும் நேர்காணலிலும் சிறுபடங்களில் நலனுக்காகவும் சினிமா தொழிலாளர்களின் பிரச்சனைகளையும் வெளிப்படையாக பேசி வந்தவர்.
தீயணைப்பு துறையினரால் உடல் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது தற்கொலைக்கான காரணத்தை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

