சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் விஜய்க்கு நன்றி தெரிவித்து நன்றி கார்டு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அதிகாலை மற்றும் காலை நேர காட்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன ஆனால் புதிய முதலமைச்சராக விஜய் பதவி ஏற்ற பின்பு கருப்பு திரைப்படத்திற்கு தமிழகத்தில் காலை 9 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கினார். இந்த ஆதரவிற்காக பல குழுவினர் தியேட்டர்களின் படத்தின் தொடக்கத்தில் அன்பான ரசிகர்கள் சார்பாக முதலமைச்சர். விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று சிறப்பு நன்றி கார்டை காட்சிப்படுத்தியிருந்தனர். தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தனது இயேசு தல பக்கத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் விஜய் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கு கருப்பு திரைப்படத்தின் காலை 9 மணிகாட்சிகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கியதற்கு மனமார்ந்த நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் சூர்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள். நேருக்கு நேர் ,ஃப்ரெண்ட்ஸ் போன்ற படங்களில் சேர்ந்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூர்யா திரிஷா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான கருப்பு திரைப்படம் கடும் நிதி சிக்கல்களோடு மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

