Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நான் நலமாக உள்ளேன்- விஜயகாந்த்

by Editor

சினிமா
நான் நலமாக உள்ளேன்- விஜயகாந்த்

தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த்துக்கு கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது சிகிச்சை எடுத்தபின் தேர்தல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இருப்பினும் தேர்தல் முடிந்தவுடன் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்த்தால் சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த 2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டார்.

இந்தநிலையில், 2 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 30ம் தேதி சிகிச்சைக்காக விஜயகாந்த் துபாய் சென்றார். அவருடன் அவரது இளைய மகன் சண்முகபாண்டியன் மற்றும் அவரது உதவியாளர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்" என பதிவிட்டுள்ளார்.

Share via
Advertiment
Ads