Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ரன்வீர் சிங் நடித்த துரந்தர்- 2 திரைப்படம் நேற்று வெளியான நிலையில் 146 கோடி வசூலில் சாதனை

by Admin

சினிமா
ரன்வீர் சிங் நடித்த துரந்தர்- 2 திரைப்படம் நேற்று வெளியான நிலையில் 146 கோடி வசூலில் சாதனை

ரன்வீர் சிங் நடித்த துரந்தர்- 2 திரைப்படம் நேற்று வெளியான நிலையில் முதல் நாளிலேயே இந்தியாவில் சுமார் 146 கோடி வசூலில் சாதனையை ஈட்டியுள்ளது. இதன் மூலம் பாலிவுட் வரலாற்றிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது . ஜவான் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது .அதிகாரப்பூர்வ வெளியிட்டுருக்கு ஒரு நாள் முன்னதாகவே நடத்தப்பட்ட சிறப்பு காட்சிகளின் மூலமே இப்படம் சுமார் 43 கோடியிலிருந்து 44 கோடியை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. ஆதித்யாதார் இயக்கிய படத்தில் ரன்வீர் சிங்குடன் சஞ்சய் தத் ,ஆர். மாதவன், அர்ஜுன் ராம் பால் மற்றும் அட்சயகண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் இந்தி தவிர தெலுங்கில் 2 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. நேற்று இந்தியில் மட்டுமே வெளியிடப்பட்ட இப்படம் மற்ற மொழிகளில் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Share via
Advertiment
Ads