Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகை ஹன்சிகா மோத்வானிமும்பை நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கியுள்ளது.

by Admin

சினிமா
நடிகை ஹன்சிகா மோத்வானிமும்பை நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கியுள்ளது.


நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் தொழிலதிபர் சோஹேல் கதுரியா தம்பதியினருக்கு மும்பை நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கியுள்ளது. மும்பை பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றம், பரஸ்பரம் சம்மதத்துடன்  இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கருத்து வேறுபாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் தனிப்பட்ட கருத்துகளில் முரண்பாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த 2024, ஜூலை 2 முதல் தனித்தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
 நடிகை ஹன்சிகா தனது கணவரிடமிருந்து எந்தவிதமான ஜீவனாம்சமும்  வேண்டாம் என்று மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்கள் இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் மிக பிரம்மாண்டமாகத் திருமணம் செய்துகொண்டனர். சுமார் 4 ஆண்டுகால திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மேற்கொண்ட சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து, இருவரும் சுமூகமாகப் பிரிய முடிவெடுத்துள்ளனர்

Share via
Advertiment
Ads