Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ராதிகா சரத்குமார் நடிப்பில் தாய்க்கிழவி 27- ஆம் தேதி அன்று திரையரங்குகளில்

by Admin

சினிமா
ராதிகா சரத்குமார் நடிப்பில் தாய்க்கிழவி 27- ஆம் தேதி அன்று திரையரங்குகளில்

ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தாய்க்கிழவி .சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவரவுள்ள  படத்தின் டிரைலர் வெளியானது. வருகிற 27- ஆம் தேதி அன்று திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை சுற்றியுள்ள நகைச்சுவையான மற்றும் உணர்ச்சிகரமான சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது .அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். ராதிகா சரத்குமாருடன் இணைந்து பால சரவணன், சிங்கம்புலி ,முனீஸ் காந்த் இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

Share via
Advertiment
Ads