Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற வீர ராஜா வீரா பாடல் - ஏ. ஆர். ரகுமானுக்கு நீதிமன்றம் உத்தரவு.

by Admin

சினிமா
பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற வீர ராஜா வீரா பாடல் - ஏ. ஆர். ரகுமானுக்கு நீதிமன்றம் உத்தரவு.

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற வீர ராஜா வீரா பாடல் ஜூனியர் டாகர் சகோதரர்களின் சிவ ஸ்துதி பாடலின் மெட்டை தழுவி உருவாக்கப்பட்டதாக கொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் காப்புரிமை வழக்கில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானுக்கு நீதிமன்றம் உத்தரவு. இந்த வழக்கில் இசை கலைஞருக்கு உரிய பெருமையை வழங்க நீதிமன்றத்தில் ஏ. ஆர் .ரகுமான் ஒப்புக் கொண்டார். இந்த இசை அமைப்பு டார்கர் வாணி பாரம்பரியத்தின் தத்ரூபத் இசையில் இருந்து ஈர்க்கப்பட்டது என்று வரிகள் பாடலின் அங்கீகாரப் பகுதியில் சேர்க்கப்படுவதற்கும் அனைத்து ஓடிடி மற்றும் சமூக வலைத்தளங்களில் அடுத்த ஐந்து வாரங்களுக்குள் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த இரண்டு கோடி ரூபாய் வைப்பு தொகை தொடர்ந்து நீதிமன்ற பதிவாளரிடம் இருக்கும் என்றும் இந்த உடன்படிக்கை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் இந்த மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்துள்ளது .எனினும் காப்புரிமை மீறல் தொடர்பான பிரதான சிவில் வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share via
Advertiment
Ads